தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு

215 0
இவ்வருடத்திற்கான வாக்காளர் பெயர் பட்டியலில் கைச்சாத்திடும் நடவடிக்கைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்குள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் சட்டத்தரணி ஜீ.புஞ்சிஹேவா இதனை தெரிவித்தார்.

வாக்காளர் பெயர் பட்டியலின் மீள் திருத்தப் பணிகளில் சுமார் 80 சதவீதம் தற்போதைய நிலையில் நிறைவு பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வாக்காளர் பெயர் பட்டியல் மீள்திருத்தம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற ஆட்சேபனைகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், மன்னார் மற்றும் வவுனியா பிரதேசங்களுக்கு மாத்திரம் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய மேலும் 10 நாட்கள் கால எல்லை பெற்றுக் கொடுக்க ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதன்படி, நேற்றைய தினத்தில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் இந்த நீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.