குடும்ப பெண்ணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

195 0

வவுனியா – கூமாங்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்ப பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் நேற்று மாலை அவரது வீட்டிலிருந்த நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக அவதானிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதே பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளம் குடும்ப பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.