வயல்வெளிகளில் விச ஜந்துக்களை வேட்டையாடிவரும் மயில்கள்- விவசாயிகள் மகிழ்ச்சி!

351 0

அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வெளாண்மைச் செய்கை அறுவடையானது, அடைமழைக்கு மத்தியில் ஆரம்பித்துள்ள நிலையில் மயில்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், விளைச்சல் நிலையிலுள்ள வேளாண்மையில் விச ஜந்துக்களான பாம்புகள், பூராண்கள், தேள்கள், நண்டுகள், விசப் பூச்சிகளின் தொல்லை மயில்களின் வருகையினால் குறைவடைந்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, விதைப்புக் காலங்களில் விச ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்பட்ட போதிலும், இப்பகுதிக்கு எண்ணிக்கையற்ற மயில்கள் பிரவேசித்து விச ஜந்துக்களை வேட்டையாடி வருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு, மயில் கூட்டங்களின் வருகையினால் அம்பாறை மாவட்டத்தின் பெரிய நீலாவணை, ஒலுவில், அட்டாளைச்சேனை, மத்தியமுகாம், நாவிதன்வெளி, சவளக்கடை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, சம்மாந்துறை, அக்கரைப்பற்று ஆகிய பகுதிகளில் விச ஜந்துக்கள் குறைவடைந்துள்ளது.