அக்கினிக்குஞ்சுகள் – ச.ச.முத்து

6172 0

akkini-kunchukalஅக்கினிக்குஞ்சுகளின் நாள் யூலை5.
தேச விடுதலைக்காக தேகமுழுதும்
வெடிகுண்டு காவிய வீரக் கரும்புலிகளின்
நினைவு சுமந்த பொழுது அது.
கரும்புலிகள்!

காரிருளே எங்கும் நிறைந்த
இரவைக் கிழித்து
சோதிப்பெரு வெளிச்சம் காட்டிய
எங்களின் குட்டிச் சூரியன்கள்.

வெந்நீர் விரலில பட்டாலே
விதி முடிந்தது போல கதறும்
நம்மில் இருந்து
வெடியதிர்வில் உடல்சிதறும்
நேரம் அறிந்தும் புன்னகை ஒன்றுடனேயே
உலாவந்த அதிசயப் பிறவிகள் இவர்கள்.

உயிர்பூவை ஒருகணத்தில் ஊதிவிட்டு
வெடியதிர்வை திசைகளெங்கும் பரவவிட்டு
உடல்சிதறப் போய்வெடிக்கும் உன்னதத்தின்
உன்னதங்கள் இவர்கள்.

போய்வெடிக்கும் நேரம் தெரிந்திருந்தும்
ஏதும் கலக்கமின்றி இலக்கை தேடிநடந்து
ஒரு சின்ன நொடிக்குள்ளாக
காற்றில் கலந்துவிட இவர்களால்
எப்படித்தான் முடிகிறதோ..?

எல்லோருக்குள்ளும் இல்லாத பெருநெருப்பு
எப்படியாய் இவர்களுக்குள் மட்டும்
மையம் கொள்கிறதோ…

சின்னத் தடிமன் காய்ச்சல் என்றாலே
இல்லாத மருந்தெல்லாம் தேடும் உலகில்
எல்லாம் உதறிவிட்டு போய்வெடிக்க
இவர்களுக்கு மட்டும் எப்படி முடிகிறது..?

தங்களையே தற்கொடைதந்த எங்கள்
பிள்ளைகளுக்காய் என்ன கைமாறு செய்தால்
நன்றிக்கடனை அடைக்கலாம் நாம்.
கைகுவித்து கும்பிடலாம்.

கவிதை வடிக்கலாம்.
நினைவுப்பொழுதில் ஒன்றுகூடலாம்.
ஏதோ ஒரு மலரை எடுத்து அவர்
நினைவில் வைக்கலாம்.- ஆனால்
இவை மட்டும் போதுமா அவர்
நினைவை மீட்க..?

இன்னும் இருள்கலையாதிருக்கும்
எங்கள் தேசத்தின் விடுதலைக்காய்
ஏதேனும் செய்வதுதான்
இந்த அக்கினிக் குஞ்சுகளுக்கு
எம்மால் ஆன நன்றிகள் ஆகும்.

-ச.ச.முத்து-

Leave a comment