இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தைத் தாண்டியது

227 0

நாட்டில் மேலும் 688 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதில் 627 திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

ஏனைய 58 பேர் சிறைச்சாலை கொரோனா கொத்தணி யில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடை யாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 03 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 837 ஆக உயர்ந்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 33 ஆயிரத்து 478 ஆக உயர்ந் துள்ளது.

 

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 9015 பேர் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.

கொரோனா தொற்றால் குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 24 ஆயிரத்து 309 ஆக அதி கரித்துள்ளது.

தற்போது இலங்கையில் கொரோனா தொற்றால் உயி ரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 154 ஆக அதி கரித்துள்ளது.