வரவு செலவுத் திட்டத்தில் அநாவசிய அபிவிருத்தித் திட்டங்களே உள்ளன- எதிர் தரப்பு

256 0

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அநாவசிய அபிவிருத்தித் திட்டங்களுக்காக அரசாங்கம் கோடிக்கணக்கான நிதியை ஒதுக்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும், தொழிலை இழந்துள்ளவர்களுக்கும் வரவு செலவுத் திட்டத்தில் எந்தவொரு நிவாரணமும் அறிக்கவி்லலை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “நாளொன்றுக்கு 500 முதல் 600 தொற்றாளர்கள் இனங்காணப்படும் நிலைமையானது நாட்டில் வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்படவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது.

இதன்மூலம் நாடு எந்தளவிற்கு அபாய நிலையை அடைந்துள்ளது என்பது சுகாதாரத் துறையினராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில்கூட கொரோனா தடுப்பிற்கான தடுப்பூசியை பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை. மாறாக அமைச்சர்கள் அனைவரும் ஆயர்வேத பானங்களை அருந்திக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், கொரோனா கட்டுப்படுத்தலுக்காக செயற்பாட்டு ரீதியில் எந்தவொரு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.