கொரோனா தொற்றாளர்கள் இருவர் அடையாளம் காணப்பட்ட வவுனியா – புதிய சாளம்பைக்குளம் பகுதியில் மேலும் மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக தாய் மற்றும் மகள் ஆகிய இருவலுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சாளம்பைக்குளம் பகுதி நேற்றுமுன்தினம் முதல் முடக்கப்பட்டது.
இதன்படி தொற்று உறுதியான இருவரிடத்திலும் நெருங்கி பழகியவர்களிடம் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது. அதன் முடிவுகளின் பிரகாரம் 3 பேருக்கு மேலும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

