ஐநா சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு என்ன பதிலை சொல்லப் போகின்றது?

176 0

1948 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் டிசம்பர் 10 ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினமாக பிரகட னப்படுத்தப்பட்டது.

மனிதன் ஒவ்வொருவனும் தானும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ விடவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இத் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் பூமிபந்தில் நாளாந்தம் பல இடங்களில் மனித உரிமைகள் மீறப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.

ஈழத்தீவில் மூன்று தசாப்பதங்களுக்கு மேல் சிங்கள பேரினவாதத்தினால் தமிழ் தேசிய இனம் வதைக்கப்பட்டுக்கொண“டுதான் இருக்கின்றது.

ஐக்கிய நாடுகள் சபையால் மனித உரிமைக:ள் ஆணைக்குழு உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன?
உலகில் உள்ள எல்லா மனிதர்களும் சமமானவர்களே. எல்லாருக்கும் சம உரிமை உண்டு. மற்றவர்களிடம் இருந்து நாம் என்ன உரிமையை எதிர்பார்க்கிறோமோ அதே உரிமையை அவர்களுக்கும் நாம் கொடுக்க வேண்டும் . யாரையும் யாரும் அடிமைப்படுத்தக் கூடாது.

மனிதனின் கௌரவத்தை அவனிடம் இருந்து பிரிக்க முடியாத உரிமைகளை அறிந்து ஏற்றுக்கொள்வதே அவனுக்கு அளிக்கும் சுதந்திரம், நீதி, சமாதானத்தின் அடித்தளம் என்று சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் முன்னுரையில் தெரிவித்துள்ளது.

ஆனால் ஈழததீவில் இனப்படுகொலை நடந்தேறியுள்ளது. ஐ.நாவே அதன் உறுப்பு நாடுகளோ நீலக்கண்ணீர் வடிக்கிறார்களே ஒழிய இரதக்கண்ணீர் வடிக்கும் ஈழ மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க முன்வரவில்லை.

ஈழத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கொரோனா வைரஸ் தாக்த்தின் மத்தியில் கூட தொடந்து போராடி வருகிறார்கள் .

இன்றைய உலக மனித உரிமை தினத்தில் ஐநா சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு என்ன பதிலை சொல்லப் போகின்றது?