மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டது

211 0

புத்தளம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு 1067 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட உலர்ந்த மஞ்சள், சட்டவிரோத கடத்தல்காரர்களினால் கடத்தலுக்கு ஏதுவாக 25 பொதிகளில் பொதி செய்யப்பட்டு உப்பு உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

கைது செய்யப்பட்ட 37 வயதுடைய சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட மஞ்சள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கை சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி இடம்பெற்றதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.