இரத்தினபுரியில் பாடசாலைகள் தற்காலிகமாக மூடல்!

282 0

எஹலிகொடை பகுதியில் உள்ள ஏழு பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இரத்தினபுரி மாவட்டத்தில், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையிலேயே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், எஹலிகொடை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்துப் பாடசாலைகளையும் மூடுவது தொடர்பில், இன்றையதினம் தீர்மானிக்கப்படும் என, சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மின்னேரிய தேசிய பாடசாலைக்கு, இன்றையதினம் வருகை தந்த மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில், கொரோனா தொற்றாளர்கள் ஒருவர் அடையாளங் காணப்பட்ட நிலையிலேயே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.