கொரோனா அச்சம்-அளுத்கமவின் 8 கிராமசேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன

35 0

கொரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக பேருவளை- அளுத்கமவின் 8 கிராமசேவையாளர் பிரிவுகளை அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர்.

குறித்த பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) மாத்திரம் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையை தொடர்ந்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மிலானியாவில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரியும் நான்கு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்ததை தொடர்ந்தே குறித்த பகுதியில் சிலருக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பி.சி.ஆர்.பரிசோதனை முடிவுகளில் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையிலேயே எட்டு கிராமசேவையாளர்கள் பிரிவுகளை தனிமைப்படுத்த தீர்மானித்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.