2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்று

301 0

2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் இரண் டாவது வாசிப்புக்கான வாக்கெடுப்பு இன்று பாராளு மன்றத்தில் இடம்பெறும்.

இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு வாக்களிப்பு திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனைகள் நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவால் கடந்த செவ்வாய்க்கிழமை பாராளு மன்றில் முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து கடந்த புதன் கிழமை முதல் வரவு செலவு திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்று வருகிறது.

அத்துடன் வரவு செலவு திட்டம் மீதான குழுநிலை விவாதம் எதிர்வரும் திங்கட்கிழமை 23 ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

வரவு செலவு திட்டம் 3 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி நடைபெறும்.

கடந்த 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2021 வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு விவாதத்திற்கு இந்த முறை 04 நாட்கள் மட்டுமே ஒதுக் கப்பட்டன.