சீன கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றும் அறுவருக்கு கொவிட்-19

340 0

கொழும்பில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வரும் நான்கு சீனப் பிரஜைகள் உட்பட அறுவருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சைனா ஹார்பர் இன்ஜினியரிங் (China Harbor Engineering Company-CHEC) நிறுவனத்தின் ஊடாக கொழும்பு 13 பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டம் ஒன்றில் பணியாற்றும் சீனர்கள் நால்வருக்கும் மற்றும் உள்ளூர் ஊழியர்கள் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த ஊழியர்கள் துறைமுக நகர திட்டத்தின் கட்டுமான தளத்தில் தற்காலிகமாக தங்கியுள்ளதாகவும் மேற்படி தங்குமிடம் கொரோனா தொற்று உறுதியான தையடுத்து முடக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வெளியேறுவதும் உட்செல்வதும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.