2020 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு மற்றும் குழுநிலை விவாதம் இன்று (12) இடம்பெறவுள்ளது.
மதியபோசன இடைவேளை இன்றி 2020 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் தொடர்பான முற்பகல் 10.00 மணிமுதல் பிற்பகல் 5.00 மணிவரை இடம்பெறும்.
ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் அடிப்படையில் அடுத்த வருடத்திற்கான அரச செலவீனமாக 2678 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்கட்சியினரால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணை தொடர்பான விவாதம் எதிர்வரும் 13 ஆம் திகதி முற்பகல் 10.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணிவரை இடம்பெறும்.

