ரெபிட் என்டிஜென் டெஸ்ட் கிட்டை பயன்படுத்த அனுமதி

329 0
கொவிட் 19 நோய்த்தொற்றுகளை அடையாளம் காண இலங்கையில் ரெபிட் என்டிஜென் டெஸ்ட் கிட்டை பயன்படுத்த சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

ஆய்வுகூட பரிசோதனையைத் தொடர்ந்து நேற்று (10) இந்த அனுமதி வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் ஆய்வுகூட சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதனை முன்னெடுப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்வதற்கு தொடர்ச்சியான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியை பெற்ற பின்னர் இலங்கையில் உள்ள அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளின் ஆய்வுக் கூடங்களை பயன்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் டொக்டர் சமன் ரத்நாயக்க கூறியுள்ளார்.

´உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரத்திற்கமைய, தொழில்நுட்ப மதிப்பீடுகளுக்காக நான்கு மூலக்கூறு வைத்திய ஆய்வு கூடங்களுக்கு உடனடி ரெபிட் என்டிஜென் டெஸ்ட் கிட்டை அனுப்பினோம். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் முடிவுகள் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளன. அந்த பரிந்துரையின் அடிப்படையில், இலங்கை வைத்தியசாலைகள் மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் அவற்றை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதற்கான வழிகாட்டுதல்களை தயாரித்து அவற்றை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு வழங்கியுள்ளோம். அவரது கையொப்பத்துடன் இது வெளியிடப்படும் போது இலங்கை வைத்தியசாலைகளில் ரெபிட் என்டிஜென் டெஸ்ட் கிட்டை பயன்படுத்த வாய்புள்ளது´ என்றார்.