கடலோர ரயில் பாதையின் ஒரு வழித் தடத்தை தற்காலிகமாக மூட ரயில்வே கட்டுப்பாட்டுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, இன்றும் (புதன்கிழமை) நாளை மற்றும் நாளை மறுதினம் கரையோர மார்க்கத்தின் பாணந்துறை வரையிலான ஒரு வழித் தடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொள்ளுப்பிட்டியிலிருந்து பம்பலப்பிட்டி வரையான ரயில் பாதையில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர திருத்தப்பணிகளுக்காக இந்த ஒரு வழித் தடம் மூடப்பட்டிருக்கும் என ரயில்வே கட்டுப்பாட்டுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக அந்தப் பகுதிக்கான பல ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் கொழும்பு கோட்டை முதல் பாணந்துறை வரையில் விசேட பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

