எதிர்வரும் நாட்கள் மிகுந்த அவதானமிக்கது – வைத்தியர் ஜயருவன் பண்டார

400 0

கொவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண் ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக எதிர்வரும் நாட்கள் மிகுந்த அவதானமிக்கதாக மாறி யுள்ளதாகச் சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார ஊடக சந்திப்பில் தெரி வித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது செயலிழந்து காணப்படும் பி.சி. ஆர் பரிசோதனை இயந்திரத்தை மீண்டும் செயற்படுத்து வதற்காகச் சீன விசேட வல்லுநர்கள் இன்று இலங்கை வர வுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், தனிமைப்படுத்தல் என்பது சிறை வாழ்க்கை அல்ல என்றும் அது இந்த சமூகத்தின் நலனைக் கருத் திற்கொண்டு மேற்கொள்ளப்படும் ஒரு விசேட செய் முறையெனவும் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரி வித்தார்.