அரச நிறுவனங்களுக்கு ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

235 0

மேல்மாகாணத்திலுள்ள அரச நிறுவனங்களுக்கு மீண்டும் “வீட்டில் இருந்து பணியாற்றும்” நடைமுறையை பின் பற்றுமாறு ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இதற்கான சுற்று நிருபம் ஒன்றினை ஜனாதிபதி செய லாளர் பி.பி ஜயசுந்தரவினால் சகல அமைச்சுகள், அரச நிறுவனங்கள், திணைக்களங்களின் பிரதானிகள், மாகாண செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர் களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கொவிட் – 19 கொரோனா தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரையான காலப் பகுதி யில், வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கான நடைமுறை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அதனை போன்று தற்போது, கொரோனா தொற்று ஏற் பட்டுள்ள கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வீட்டில் இரு ந்து பணியாற்றும் நடைமுறையை முன்னெடுக்க படும் என கோரப்பட்டுள்ளது.

அதேநேரம், ஏனைய மாவட்டங்களில் சுகாதார துறை யினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைகளின் படி வழமையான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி செயலாளர் பி.பி ஜயசுந்தரவினால் வெளி யிடப்பட்டுள்ள சுற்றுநிருபத்தில் உள்ளடக்கப் பட்டுள்ள தாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.