கொழும்பின் பல பகுதிகளில் ஊரடங்கு ஏன்? எப்போது நீக்கப்படும்?

277 0

கொழும்பின் பல பகுதிகளில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்குசட்டம் குறித்து மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஆராயப்படும்,இந்த பகுதிகளில் கொரோனா ஆபத்து குறைவடைந்த பின்னரே ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் என அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.


கொழும்பின் பல பகுதிகளில் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்தே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,இவர்கள் தற்போது மிகவேகமாக பரவிவரும் பேலியகொடை மீன்சந்தை தொற்றுடன் தொடர்புடையவர்கள் எனவும் அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

பொரளையில் பல நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்,புறக்கோட்டை கோட்டை பகுதிகளில் முக்கிய வர்த்தக தளம் என்பதால் அங்கும் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.


புறக்கோட்டையிலும் கொழும்பிலும் சில மிகவும் ஆபத்தான பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன,வர்த்தக நோக்கங்களிற்காக ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடமிது,இதன் காரணமாகவே மேலதிக பரவலை தடுப்பதற்காக ஊரடங்கினை பிறப்பித்துள்ளோம் என அரசாங்க தகவல்கள் தெரிவித்துள்ளன.
மூன்று நாட்களுக்கு ஒரு முறை நிலைமையை அதிகாரிகள் ஆராய்வார்கள், நோய் பரவல் தணிந்தால் ஊரடங்கினை நீக்குவார்கள்,ஊரடங்கு நடைமுறையில் உள்ள பகுதிகளில் பிசிஆர் சோதனைகள் இடம்பெறும் நோயாளிகள் அடையாளம் காணப்படுவார்கள்,மக்கள் அதிகமாக காணப்படும் இந்த பகுதிகளில் நோயாளர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை இடம்பெறும் எனவும் அரச தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.


கொழும்பின் ஏனைய பகுதிகளில் ஊரடங்கினை அமுல்படுத்துவதற்கான திட்டம் எதுவுமில்லை, குறிப்பிட்ட ஒரு பகுதியில் குறிப்பிட்ட எண்ணிக்கையான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டால் அந்த பகுதியில் உடனடியாக ஊரடங்கினை அறிவிப்போம் எனவும் அரச தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.