சிறிய வகை செயற்கைகோள் தயாரித்த தமிழக மாணவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

29 0

சிறிய வகை செயற்கைகோள் தயாரித்த தமிழக மாணவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்ததுடன், ரூ.3 லட்சம் ஊக்கத் தொகையும் வழங்கினார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
தமிழக மாணவர்களான அத்னான், கேசவன், அருண் ஆகியோர் தயாரித்த சிறிய வகை செயற்கைகோள், நாசா விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவுவதற்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதை அறிந்து பெருமை கொள்கிறேன்.
அந்த மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ.3 லட்சம் நிதியை வழங்கினேன்.
அனைத்துத் துறைகளிலும் நம் தமிழக மாணவர்கள் தலைநிமிர வேண்டும். வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.