அண்ணா பல்கலைக்கழகம் முன்பு திமுக இளைஞரணி போராட்டம்

25 0

அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி திமுக இளைஞரணி, மாணவரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக்கோரி திமுக இளைஞரணி, மாணவரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அண்ணா பல்கலை. உறுப்பு கல்லூரிகள், பொறியியல் கல்லூரி முன் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை. முன் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி, அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.