வவுனியாவில் பலத்த காற்று- 14 வீடுகள் சேதம்!

273 0

வவுனியாவில் வீசிய பலத்த காற்று காரணமாக 14 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

பலத்த காற்றினால் நெடுங்கேணியில் நேற்று ஒரு வீடு சேதமடைந்த நிலையில், இன்று வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு, வவுனியா, செட்டிகுளம் போன்ற பகுதிகளில் 13 வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளன.

இந்த சம்பவங்களில் குறித்த வீடுகளின் 36 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது .

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு அப்பகுதி கிராம அலுவலகர்கள் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.