சச்சின் டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்தியாவிலுள்ள சிறப்புத்திறன் மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள், ஒலிம்பிக் உள்ளிட்ட பல போட்டிகளில் பங்கேற்று அதிகளவில் பதக்கங்களும், பரிசுகளும் பெற்றுள்ளனர். அவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு, பரிசுகளை வழங்குகிறது. ஆனால் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு இணையாக இவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவில்லை. இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மதுரையை சேர்ந்த மதுரேசன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

