இலங்கையர்களை சிறிலங்காற்கு அழைத்து வரும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்

251 0

சிறிலங்காவில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கை தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் (ஓய்வு பெற்ற) பேராசிரியர் ஜெயநாத் கொலம்பேஜ் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளமையினால் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தருபவர்கள் அனைவரும் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது, ​​57 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இலங்கைக்கு வர விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.