மலையக மக்களின் பிரதிநிதியாக 19 ஆவது திருத்தத்திற்கே ஆதரவளிப்பேன்- வடிவேல் சுரேஸ்

318 0

19 ஆவது திருத்தம் அல்லது 19 பிளஸ் திருத்தத்திற்கு மலையக மக்களின் பிரதிநிதி என்ற வகையில் ஆதரவளிக்க தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, ’19 ஆவது திருத்தம் அல்லது 19 பிளஸ் திருத்தத்தை ஆதரிக்க தயார். அதுவே எனது நிலைப்பாடு.

மலையக மக்களுக்கு காணி உரிமையும் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதாகவும் அதேபோல் தமிழ்  நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாகவும் கூறினால், இரு கரங்களை உயர்த்தி, இருபதை ஆதரிக்க தயார்.

இவ்விடயம் தொடர்பாக  தெளிவாக சொன்னால் தாய், தந்தை இல்லாத இருபதை ஆதரிக்க தயாரில்லை. தமிழ் மக்களினால்  நாடாளுமன்றம் சென்ற எவரும் 20யை வாசித்து புரிந்திருந்தால் அதனை ஆதரிக்கமாட்டார்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.