தேங்காய்க்கான நிர்ணய விலை வர்த்தமானியில் அறிவித்தல்

270 0

ஒரு தேங்காய்க்கான அதிகபட்ச சில்லறை விலையை அரசாங்கம் வர்த்தமானியில் அறிவித்துள்ளது.

12 அங்குல தேங்காயின் விலை 60 ரூபா என நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் வர்த்தமானி அறிவிப்பில் அறிவித்துள்ளார்.

இதன்படி, 12-13 அங்குல சுற்றளவு கொண்ட தேங்காய் களின் விலை 65 ரூபா எனவும், 13அங்குலத்தை விட அதி கமான தேங்காய்களின் விலை 70 ரூபாவாக விற்பனை செய்யப்படவேண்டும் என அந்த வர்த்தமானியில் அறிவித் துள்ளது.

குறித்த விலைகள் இன்று முதல் அமுலுக்கு வரும் என அறிவித்துள்ளது.