ரஸ்ய பிரஜை தங்கியிருந்த ஹோட்டலின் பணியாளர்களும் குடும்பத்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்

279 0

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட மாத்தறை பிரஜை தங்கியிருந்த ஹோட்டலின் பணியாளர்கள் விதிமுறைகளை மீறி தங்கள் வீடுகளுக்கு சென்றமை குறித்து சுகாதார அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியேறிய தினத்திலிருந்து 14 நாட்களுக்கு ஹோட்டலின் பணியாளர்கள் ஹோட்டலிலேயே தங்கியிருக்கவேண்டும் என தொற்றுநோயியல் நிபுணர் சுடத்சமரவீர தெரிவித்துள்ளார்.

எனினும் குறிப்பிட்ட ஹோட்டலின் பணியாளர்கள் சிலர் வீடுகளுக்கு சென்றுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

வீடுகளுக்கு சென்ற ஹோட்டல்பணியாளர்களையும் அவர்களது குடும்பத்தவர்களையும் தனிமைப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மாத்தறை ஹோட்டலில் தங்கியிருந்தவேளை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதே ரஸ்ய பிரஜைக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என சுடத் சமரவீர தெரிவித்துள்ளார்.

ஹோட்டல் பணியாளர்களை தற்போதுதனிமைப்படுத்தியுள்ளோம் ரஸ்ய பிரஜையுடன் தொடர்பிலிருந்தவர்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என அவர்தெரிவித்துள்ளார்.

30பேரை இனம்கண்டுள்ளோம் 150பேரை தனிமைப்படுத்தியுள்ளோம் என அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.