பசியோடு இருந்த திலீபனின் 10 ஆவது நாள் யேர்மனி கம்பூர்க் நகரமத்தியில் நினைவுகூரப்பட்டது.

735 0

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் உண்ணாநோன்பின் பத்தாவது நாளான இன்று இந் நிகழ்வு யேர்மனி கம்பூர்க் நகரமத்தியில் இளையவர்களால் முன்னெடுக்கப்பட்டது. இந் நிகழ்வில் கம்பூர்க் வாழ் தமிழ் மக்களும் யேர்மனிய மக்களும் தியாக தீபத்திற்கு மலர் தூவி சுடர் ஏற்றினார்கள்.

தாயகத்தில் சிறிலங்கா நீதிமன்றங்கள் மறுபடியும் தமது இனவாத சர்வாதிகாரச் சட்டத்தை அமுல்படுத்தியிருக்கும் நிலையில்,திலீபன் உண்ணா நோன்பிருந்த நல்லூர்க்கந்தன் முன்நிலையில் அங்குள்ள மக்களுக்கு சுடர் ஏற்றுவதற்கு பயங்கரவாத சிங்கள நீதிமன்றம் மறுத்திருக்கும் நிலையில்,

தங்களது விடிவுக்காக சனநாயக வழியில் போராடி உயிர் நீத்த தியாக தீபத்திற்கு தங்கள் வீட்டுக்குள் இருந்தபடி மலர்;தூவ சிங்களச்சட்டம் நிர்ப்பந்தித்திருக்கும் நிலையில்,

புலம்பெயர்ந்து யேர்மனியில் வாழும் தமிழ்மக்களும் அவர் தம் பிள்ளைகளும் தியாக தீபத்தினை யேர்மனியின் முக்கிய நகரங்களின் மத்தியில் அலங்கரித்து மலர்தூவி, சுடர் ஏற்றி திலீபன் என்பவர் யார் அவர் எதற்காக உண்ணாநோன்பிருந்து எங்களுக்காக உயிர் நீத்தார் என்ற விளக்கத்தையும் யேர்மனிய மக்களுக்கு குறிப்பாக அந்த இடத்தினை நாடிவந்த யேர்மனிய பல்கலைக்கழக மாணவர்களுக்கும் எடுத்துரைத்தனர்.

அந்த வகையில் பதினொராவது நாளான நாளைய தினம் இந் நிகழ்வானது யேர்மனியிலே எசன் நகரத்தில் அமைந்திருக்கும் மாவீரர் தூபிக்கு முன்னால் நடைபெற இருக்கின்றது.
எசன் நகர தமிழ் மக்களை மாவீரர் தூபிக்கு வந்து தியாக தீபத்திற்கு சுடர் ஏற்றும்வண்ணம் உரிமையுடன் அழைக்கின்றார்கள்.