ஈகைச்சுடர் லெப். கேணல் திலீபன் அவர்கள் உண்ணா நோன்பிருந்த 9ஆவது நாள் இன்று யேர்மனி ஒஸ்னாபுறுக் நகரில் நினைவு கூரப்பட்டது.

779 0

இளைய மாணவர்கள் இந்நிகழ்வை ஒருங்கிணைத்து நடாத்தியதோடு நிகழ்வின் நோக்கத்தினையும் திலீபன் அவர்களது தியாகத்தினையும் வருகை தந்திருந்த வெளிநாட்டவர்களுக்கு உணர்வோடு விளக்கமளித்தார்கள். குறிப்பாக வந்திருந்த பல்கலைகழக மாணவர்கள் சிலர் இப்படியும் ஒரு உன்னத மனிதர் வாழ்ந்தாரா? என ஆச்சரியத்தோடு வியந்தார்கள். அத்தோடு ஈகைச்சுடர் திலீபன் அவர்களின் துண்டுப்பிரசுரங்களை பல்கலைகழகத்தில் வைப்பதற்காக கேட்டு வாங்கிச்சென்றார்கள்.

தியாகச் சுடர் லெப்.கேணல் திலீபன் அவர்களின் பத்தாவது நாள் உண்ணாநோன்பு யேர்மனி கம்பூர்க் நகரத்தில் 16.00 மணிக்கு ஆரம்பமாக இருக்கின்றது இந்த நகரத்தில் உள்ள தமிழ்மக்களை தியாக தீபத்திற்கு மலர்தூவ அழைக்கின்றார்கள் கம்பூர்க் வாழ் தமிழ் இளையவர்கள்.

Ballindamm 40

Freifläche vor der Europapassage

20095 Hamburg