அண்ணன் திலீபன் யார் இந்த மனிதன்?-இளந்தீரன்.

552 0

இந்த வினாவிற்கு ஒருவர் தரும் விடையில் இருந்துதான் அவருடைய தமிழீழம் நோக்கிய விடுதலை அரசியலை முழுமையாக அறிந்து கொள்ள முடியும். தமிழீழ விடுதலைப் போராட்டம் தனியே மண்மீட்ப்புக்கான போராட்டம் மட்டுமல்ல. சமூக மீட்டெடுப்புக்கான பல புரட்சிகளையும் போராட்டங்களையும் உள்ளடக்கியது. இதை செயல் மூலம் மக்களுக்கு காட்டி அதன் குறியீடாக எம்மத்தியில் வாழ்பவர்தான் திலீபன்.

2009 ல்இ தமிழீழ போராட்டம் அதே கொள்கையுடன் தொடருவதா அல்லது கொள்கைகளை கைவிடுவதா என்ற உச்சக்கட்ட புள்ளியில்இ போராட்டம் எதற்கும் விலைபோகாமல் கொள்கையுடன் தொடர்வதற்காக பாரிய ஒரு அழிவை சந்தித்தது. இதற்க்காக பல மூத்த அனுபவம் மிக்க மக்களையும் போராளிகளையும் விலையாக கொடுத்தது. இன்று எமது மண்ணுக்கான போராட்டம் மீதமுள்ள எமது கைகளில் வந்துள்ளது. இந்த பொறுப்பை தாங்கும் எமக்கு திலீபன் என்ன வழி காட்டிச் சென்றார் என்ற தெளிவு அவசியம்.
திலீபனுடைய அரசியல் தமிழீழத்துக்காக தமிழீழ மக்களுக்கு விடுதலைப்புலிகளால் முன்வைக்கப்பட்டது.

விடுதலைப்புலிகளின் அரசியலுக்கு இணைவாக இளைஞர்களையும் பெண்களையும் போராட்டத்துடன் இணைப்பதில் திலீபன் முக்கிய பங்கு ஆற்றினார். பெண்களின் ஊடான சமூக மாற்றம்தான் நிரந்தரமானது என்றும்இ பெண்களின் சரிபாதி பங்கு இல்லாத போராட்டம் முழுமையான வெற்றியை அடையாது என்ற தமிழீழ சித்தாந்தத்தின் ஒரு முக்கிய புள்ளியை எமக்கு காட்டி சென்றார் திலீபன்.

இன்று மக்களால் மதிக்கப்படும் பல பெரியவர்களை எதற்காக அவர்கள் பெரியவர்கள் ஆனார்கள் என்பதை மறந்து அவர்களின் உருவத்தை மட்டும் கொண்டாடுகிறோம். அதற்கு ஒரு சிறந்த உதாரணம் சாதியத்தை ஒழிப்பதற்குப்போராடிய அம்பேத்கர். இன்று சாதியத்தை பிடித்துக்கொண்டிருக்கும் இந்துத்துவவாதிகளும் அம்போத்கார் உருவத்தை போற்றுகின்றனர். அதுபோல நாமும் தமிழீழ சித்தாந்தத்திற்காக போராடிய திலீபனின் உருவத்தை மட்டும் போற்றுவது சரியாகுமா?

இன்று எமது போராட்டத்தில் தமக்கு எது பொருந்துகின்றதுஇ எது பொருந்தவில்லை என்று பார்த்துஇ தமக்கு பொருந்துவதற்கு ஏற்றவிதத்தில் தமிழீழ சித்தாந்தங்கள் கதைக்கப்படுகிறது. அது போலவேஇ திலீபன் என்ற போராளியையும் தமது எண்ணத்துக்கு ஒத்துப்போகக்கூடிய கோணத்தில் இருந்துதான் காட்ட முயற்சிக்கின்றார்கள். திலீபன் என்ற போராளியை போராட்டத்துடன் இணைத்து பார்க்காமல்இ அவரை தனியொருவராக அவர் பற்றிய சில விபரங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக தெரிந்தெடுத்துஇ தமக்கான ஒரு கற்பனையில் திலீபனை காட்ட முயற்ச்சிக்கின்றனர்.

இன்று நாம்இ திலீபன் பற்றி அர்த்தமற்ற பல கதைகளை சொல்லி பெருமையடைகிறோம். திலீபன் என்னிடம் கேட்டுத்தான் உண்ணாவிரதம் இருந்தார் என்றும்இ நானும் அவர்பக்கத்தில்தான் இருந்தேன் என்றும்இ திலீபன் என்னுடைய மாணவன் தான் என்றும்இ திலீபனுக்கு நான்தான் அரசியல் ஆசான் என்றும்இ இன்னும் பற்பல கற்பனைகளை அடுக்கி செல்கின்றோம். இவ்வாறு சொல்வதால் என்ன மாற்றம் நேர்ந்து விடப்போகின்றது? இவ்வாறன அர்த்தமற்ற கற்ப்பனைகளில் திலீபன் யார் என்பது மறைக்கப்படுகிறது என்பதை நாம் உணர தவறுகிறோம். திலீபனின் அரசியலும்இ திலீபன் காட்டிவிட்டு போன விடுதலைப் புலிகளின் தமிழீழ சித்தாந்தமும் மறைக்கப்படுகின்றது.திலீபன் என்பவருடைய தனிப்பட்டவிபரம் அறிவதோ அதை நினைவுவைத்திருப்பதோ தவறு இல்லை. ஆனால் திலீபன் என்ற மகத்துவத்தை போராட்டத்தில் இருந்தும் போராளி என்ற தளத்தில் இருந்தும் பிரித்துவிட்டால் திலீபனுடைய அரசியல் தனியே இரங்கல் நிகழ்ச்சிகளுடன் கடந்து சென்றுவிடும்.

இலங்கைத்தீவில் பிரித்தானிய காலனித்துவத்தின் பின்னர் சிங்கள இனம் ஆட்சிப்பொறுப்பை ஏற்றதில் இருந்து ஈழத்தமிழருக்கு எதிரான பல்வேறு சமூக அரசியல் புறக்கனிப்புக்கள் நடக்கும்போதெல்லாம் அகிம்சைமுறையில்தான் எமது மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இன்னும் செல்லப்போனால் 1956 ல் ஈழத்தமிழர்கள் மீதான படுகொலைகள் அரங்கேறத்தொடங்கியபின்னரும் அகிம்சைமுறையில்தான் எமது இனம் தமக்கான உரிமைகளைக்கேட்டது. இவ்வாறு அகிம்சை முறையில் நீதி கேட்டவர்கள் மீது வன்முறைதான் பிரயோகிக்கப்பட்டது. பின்னர் இது படிப்படியாக ஆயுதப்போராட்டமாக மாறியது.

ஆயுதம் தாங்கிய தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகளாக எமது மக்களுக்கு பாதுகாப்பு அரனாக மாறினார்கள். இந்தசூழ்நிலையில்தான் 1987 ல் இந்திய இலங்கை ஒப்பந்தமும் இ இந்திய இராணுவத்தினர் ஈழம் நோக்கிய வரவால் இந்திய இலங்கை ஒப்பந்தம் தொடர்பாக மக்கள் மத்தியில் ஏற்ப்படுத்திய பிழையான புரிதலாலும்இ இந்திய அரசு முன்வைக்கும் அதிகாரப்பகிர்வை புலிகள் மறுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டாலும்இ ஒப்பந்த அடிப்படையில் புலிகள் ஆயுதங்களைக் கையளித்தாலும் புலிகளுக்கு ஆயுதம் மேல்தான் விருப்பம் என்ற இலங்கை அரசின் குற்றச்சாட்டுக்கும் பதில் செல்லும் விதமாகவும்இ எமது மக்களின் தெளிவின்மையை புரியவைக்கவும்இ இந்திய இலங்கை ஒப்பந்தம் இருநாட்டு நலன்கள் அடிப்படையில் நடைபெற்றனவே தவிர தமிழீழ மக்கள் எந்த விதத்திலும் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்ற உண்மையை எமது மக்களுக்கும் உலகுக்கும் காட்டுவதற்க்காக திலீபன் ஆகக்குறைந்த பட்ச ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து நீர்கூட அருந்தாமல் தன்னை உருக்கி தெளிவாக இந்த குழப்பமான அரசியலை எமக்கு புரியவைத்தார். இவ்வாறு பலம்வாய்ந்த அமைப்பாக உருவான பின்னர் கூடஇ அகிம்சை மூலம் எமது இனத்துக்கான ஆகக்குறைந்தபட்ச கோரிக்கைகளை கேட்டதுதான் ஆகக்கூடிய விடுதலைப்புலிகளின் அரசியல் உச்சம்.

இலச்சியத்துக்காக பயணிப்பவர்களுக்கும் சித்தாந்த அறிவு உள்ளவர்களுக்கும் பாரிய வேறுபாடு உள்ளது. இந்த வேறுபாட்டின் இடைவெளியில்தான் நாம் தொலைந்துபோகின்றோம்.
இலச்சிய கொள்கை உடைய ஒரு போராளி சித்தாந்தங்களை தெரிந்திருக்க வேண்டிய தேவை இல்லை. ஏன் என்றால் இலட்சியத்தை நோக்கிய பயணத்தில் உள்ள போராளியின் வாழ்க்கை அந்த இலச்சிய சித்தாந்தத்தின் சாரமாகத்தான் அமையும். மாறாக சித்தாந்தம் பேசுபவர்கள் இலச்சியவாதிகளாக இருக்கவேண்டும் என்பது அல்ல. இதில் திலீபன் இலட்சிய உறுதியுடனும்இ சித்தாந்தங்கள் தொடர்பான தெளிவாலும் எம் தமிழீழத்துக்கான அரசியல் சித்தாந்தமான சம உடமை சோசலிச சமூகமாகத்தான் தமிழீழம் அமையும் என்பதையும் அவ்வாறு அமையும் தமிழீழம் மக்கள் புரட்சி மூலம் தான் அமையும் என்று கூறிச்சென்றார் திலீபன்.

திலீபனுடைய இலச்சிய உறுதியையும் அவர் எம்மக்களுக்காக வகுத்த அரசியல் வடிவத்தையும் முழுமையாக விளங்கிக்கொள்வதற்கு திலீபன் காலத்து ஆக்கங்களான சுதந்திப்பறவைகள்இ கட்டுரைகள் மற்றும் பத்திரிகைகளின் வரிகளை படிக்க வேண்டும்.. திலீபனுடன் நின்று களப்பணியாற்றிய சில தோழர்கள் இன்றும் இருக்கின்றார்கள்இ அவர்களிடம் உரையாடவேண்டும்இ சிங்கள பேரினவாதம் இன்றும் திலீபனைக்கண்டு அஞ்சுகின்றார்கள் அதற்க்கான காரணம் என்ன? இவ்வாறான விடயங்களில் இருந்து திலீபனை உணரும்போது எம்மால் விடுதலைப் புலிகளின் சித்தாந்தங்களை சென்றடையமுடியும்.

இளந்தீரன்