தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய பேச்சாளர் தெரிவு இன்று இடம்பெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று பாராளுமன்றத்துக்கு வராததால் பாராளுமன்றக் குழு இன்று கூடவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
வியாழக்கிழமை பாராளுமன்றக்குழு கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அதற்கான சாத்தியங்களும் குறைவாகவே இருப்பதாக கூட்டமைப்பு எம்.பி. ஒருவர் தினக்குரல் இணையத்துக்குத் தெரிவித்தார்.
சம்பந்தன் கொழும்பில் நிற்கின்ற போதிலும், வேறு முக்கியமான சந்திப்புக்கள் இருப்பதால் பாராளுமன்றத்துக்கு வருகைதர முடியாதிருப்பதாக கூட்டமைப்பு எம்.பி.ககளுக்குத் தெரியப்படுத்தப்பட்டிருக்கின்றது.

