சிறிலங்காவில் பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் தீ – ஒருவர் பலி

308 0

சிறிலங்கா-கட்டான, களுவாரிப்பு பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (21) இரவு 11 மணியளவில் இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன் குறித்த தொழிற்சாலையில் சேவையாற்றும் 65 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அங்கிருந்த வெடிபொருட்கள் வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் இனங்காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கட்டான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.