கண்டி கட்டிடம் இடிந்து வீழ்ந்தமைக்கான காரணம் வெளியானது

254 0

கண்டி, புவெலிகடவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடிந்த வீழ்ந்த கட்டிடத்தின் அஸ்திவாரமானது பாதுகாப்பு தரத்தின்படி நிர்மாணிக்கப்படவில்லை என்பதுடன் அது தரையில் சரியமான முறையில் இணைக்கப்படவில்லை என தேசிய கட்டிட ஆராச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இடிந்த வீழ்ந்த ஐந்து மாடிக் கட்டிடம் தாழ்வான, திறந்தவெளி வடிகால் அருகே நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் கண்டி மாவட்டத்தின் தேசிய கட்டிட ஆராச்சி நிறுவனத்தின் புவியியலாளர் சமந்த போகாஹாபிட்டிய குறிப்பிட்டார்.

நீர் வடிகால் மற்றும் பிற சிக்கல்கள் காரணமாக, கட்டிடம் நிலையானதாக இருக்காது என்றும், தரையுடனான அதன் தொடர்பும் வலுவாக இல்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கட்டமைப்பின் தரமற்ற தன்மை மற்றும் உறுதியற்ற தன்மை காரணமாக கட்டிடம் இடிந்து விழுந்தன என்று முதற்கட்ட விசாரணைகள் மூலம் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இடிந்து விழுந்த கட்டிட நிர்மாணத்திற்கு ஒப்புதல்கள் வழங்கப்பட்டிருந்தாலும், ஏற்றுக்கொள்ளப்பட்ட பாதுகாப்பு தரத்தின்படி கட்டிடம் கட்டப்பட்டது என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

எனவே கண்டி சம்பவம் தொடர்பான அனைத்து விவரங்களையும் கண்டறிய மதிப்பீடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் புவியியலாளர் சமந்த போகாஹபிட்டிய மேலும் கூறினார்.