தியாக தீபம் லெப். கேணல் தீலீபனின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தலின் முதல்நாள் நிகழ்வு யேர்மனி முன்சன் நகரில் ஆரம்பமானது.

194 0

கொரோனா கொடிய கொள்ளைநோய் அதிகரித்துவரும் இவ் வேளையில் தியாக தீபம் லெப்.கேணல் தீலீபன் அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தலை மண்டபங்களுக்குள் பெரிய அளவில் நினைவுகூர முடியாத நிலையில் 15.9.2020 செவ்வாய்க்கிழமை இன்று யேர்மனி முன்சன் நகரத்தில் நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பமானது.

இந் நிகழ்வானது தொடர்ச்சியாக யேர்மனியின் முக்கிய பன்னிரெண்டு நகரங்களில் நிகழவிருக்கின்றது. அந்தவகையில் நாளை புதன்கிழமை ஸ்ருட்காட் நகரமத்தியில் 17.00 மணியிலிருந்து 19 .00 மணிவரை 70173 Stuttgart Schloss Platz எனும் இடத்தில் நடைபெறுகின்றது.

26.9.2020 சனிக்கிழமை யேர்மனி பேர்லின் நகரத்தில் உள்ள பரிசப் பிளற்ஸ்; (Pariser Platz1 , Brandenburger Tor ) என்னும் இடத்தில் அடையாள உண்ணா நிலைப் போராட்டம் காலை 11 மணிக்கு ஆரம்பித்து மாலை 18 மணிக்கு வணக்க நிகழ்வுடன் நிறைவடையும்.