டிசம்பர் 31-க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை… தேர்தல் ஆணையம்

351 0

election_commission__largeதமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை டிசம்பர் 31ம் தேதிக்குள் நடத்துவது சாத்தியமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த அக்டோபர் 24ம் தேதி முடிந்தது. இதனால், தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதை எதிர்த்து திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ததுடன், புதிய அறிவிப்பினை வெளியிட்டு தேர்தலை டிசம்பர் 31ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் சார்பில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், தமிழகத்தில் டிசம்பர் 31ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்றுவதற்கான நடைமுறைகளை ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கு மீதான விசாரணையை 2017ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.