சிறிலங்காவில் கொரோனா தொற்றினால் 13 ஆவது மரணம் பதிவு

9 0

சிறிலங்காவில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பஹ்ரைனில் இருந்து செப்டம்பர் 2 அன்று நாடுதிரும்பிய குறித்த நபர் சிலாபம், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

நுகேகொட பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த நபர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.