பிரதமருக்கேநகல்வடிவில் என்ன உள்ளது என்பது தெரியாது

205 0

ஒரு தனிநபரை அடிப்படையாக கொண்டதாக அரசமைப்பினை உருவாக்கமுடியாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ண இதனை தெரிவித்துள்ளார். ஒருதனிநபரின் நடத்தையை அடிப்படையாக வைத்து அரசமைப்பை உருவாக்குவதால் எதிர்காலத்தில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தையும் பிரதமர் அலுவலகத்தையும் கணக்காய்வுகுழுவின் கண்காணிப்பிலிருந்து அகற்றும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

19வது திருத்தம் குறித்து ஆராய்வதற்கு பிரதமர் குழுவொன்றை அமைத்துள்ளமை முன்வைக்கப்பட்டுள்ள நகல்வடிவில் என்ன உள்ளது என்பது பிரதமருக்கே தெரியாது என்பதை வெளிப்படுத்தியுள்ளது எனவும் எரான் விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார்.

இது கவலையளிக்கும் நிலைமை என அவர் தெரிவித்துள்ளார்.