சிறிலங்காவில் வனவிலங்குகளின் பாதுகாப்பு தொடர்பான கடுமையான சட்டங்கள் அடங்கிய புதிய வரைவு இரண்டு மூன்று வாரங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மஸ்கெலியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், குறித்த புதிய வரைவு உடனடியாக அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் என கூறினார்.
மேலும் சட்டவிரோதமாக வேட்டையாடினால் 100,000 ரூபாய் அபராதம் மற்றும் ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு காடுகளுக்கு தீ வைத்தால் ஐந்து ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவிப்பார்கள் என்று அமைச்சர் கூறினார்.
வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் கண்டிப்பாக அமுல்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்த அமைச்சர் சி.பி.ரத்நாயக்க, மிருகக்காட்சி சாலைகளிலும் சதுப்பு நிலங்களிலும் கடல் வாழ் உயிரினங்களையும் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

