யேர்மன் வெளிநாட்டினர் ஆலோசனைச் சபைத் “Intigration rat Wahl” தேர்தலில் களமிறங்கும் ஈழத்தமிழர்கள்!

816 0

எதிர்வரும் 13.08.2020 அன்று ஞாயிற்றுக்கிழமை வெளிநாட்டினர் ஆலோசனைச் சபைத் தேர்தல்” Intigration Rat” யேர்மனியில் பல மாநிலத்தில் நடைபெறவுள்ளது. இத் தேர்தலானது இந்நாட்டில் வாழ்கின்ற வேற்றுநாட்டு இனத்தவர்களை, யேர்மனியர்களுடன் இணைத்து புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கும், ஐக்கியப்படுத்தவும், அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், பண்பாடுகளைப் பரிமாறிக்கொள்ளவும், நாட்டின்தேவை கருதி அவர்களின் ஆலோசனகளைப் பெறவும், இவ் ஆலோசனைச் சபையானது உருவாக்கப்பட்டுள்ளது.

இச் சபைக்கான தேர்தலில் இம்முறை ஈழத்தமிழர்கள் வேட்பாளர்களாக நிற்பதற்கு முன்வந்தமையானது பாராட்டிற்குரிய விடயமாகும். எதிர்காலத்தில் கூடுதலான இளையோர்கள் யேர்மனியலுள்ள அனைத்து மாநிலங்களிலும் நடைபெறும் ஒருங்கிணைப்புச் சபைத் தேர்தலிலும் வேட்பாளர்களாக நின்று வெற்றி வாகை சூடி யேர்மனிவாழ் ஈழத்தமிழரின் குறைதீர்க்க வல்லவர்களாக செயற்படவேண்டுமென்ற கோரிக்கையை கவனத்திற்கொண்டு எதிர்காலத்தில் செயற்பட முன்வரவேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வெளிநாட்டினர் ஆலோசனைச் சபைத் தேர்தலில் பங்குபெறும் ஈழத்தமிழ் வேட்பார்கள் வெற்றிபெற எமது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவிப்பதோடு, இவர்களுக்கு அதிகமான ஈழத்தமிழர்கள் வாக்களித்து இவர்களை அமோக வெற்றிபெறச் செய்யவேண்டுமென யேர்மனி வாழ் ஈழத்தமிழர்களை மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஜேர்மனி.