தருமபுரி நெல்லி நகரை சேர்ந்தவர் முனீஸ்குமார். இவரது மனைவி சவுமியா. இவர்களது மகள் ஹாசினி (வயது7). இவர் தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த சிறுமி 7 நிமிடங்களில் ஒரே நேரத்தில் 7 விதமான ரூபிக்கள் க்யூப் சேர்த்தும், ஹீலா ஹீப் எனப்படும் சாகச வளையத்தை இடுப்பில் சுற்றியபடி 240 நாடுகள் மற்றும் அதன் தலைநகர் பெயரை உச்சரித்தும் சாதனை படைத்துள்ளார்.
இந்த சாதனையை அங்கிகரித்து யூனிவர்சல் புக், இந்தியன் புக், பியூச்சர் கலாம் ஆப் ரெகார்ட்ஸ் ஆகியவை சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கி சாதனை புத்தகத்தில் ஹாசினியின் பெயரை சேர்த்துள்ளனர்.
இதுகுறித்து சிறுமி ஹாசினி கூறுகையில், வரும் நவம்பர் மாதத்தில் நடக்க உள்ள கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன். சவாலான விளையாட்டுகள் என்றால் எனக்கும் மிகவும் பிடிக்கும் என்றார்.

7 நிமிடங்களில் ஒரே நேரத்தில் 7 விதமான ரூபிக்கள் க்யூப் சேர்த்தும், ஹீலா ஹீப் எனப்படும் சாகச வளையத்தை இடுப்பில் சுற்றியபடி 240 நாடுகள் மற்றும் அதன் தலைநகர் பெயரை உச்சரித்தும் 7 வயது சிறுமி சாதனை படைத்துள்ளார்.