பண்டாரவன்னியனின் 217வது நினைவு தினம் இன்று (25) யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அம்மன்னனின் உருவச் சிலை முன்னால் தமிழ் தேசிய கட்சியால இந்நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது அங்குள்ள உருவச்சிலைக்கு முன்பாக அம்மன்னனின் உருவப்படம் வைக்கப்பட்டு, அதற்கும் உருவச் சிலைக்கும் மாலை அணிவித்து, மலர்களை தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.


