மறைந்த எமது தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மீது நம்பிக்கை வைத்து மக்கள் எமக்கு வாக்களித்துள்ளார்கள். அவர்களின் நம்பிக்கைக்கேற்பவும் அதே நேரம் எம் மீது நம்பிக்கை வைத்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் தொண்டமானின் அமைச்சியினையே வழங்கியுள்ளார்கள். எனவே மறைந்த தலைவர் மலையகப்பகுதியில் என்னென்ன அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுத்தாரோ அந்த வேலைத்திட்டங்களையும் அவர் எதிர்ப்பார்த்திருந்த திட்டங்களையும் இந்த அமைச்சு ஊடாக நிறைவேற்றுவோம் என பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளருமான மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்தார்.
ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அமைச்சுப்பதவியில் கடமையேற்கும் நிகழ்வு இன்று (14) கொழும்பு கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சில் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…
நுவரெலியா மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு சேவையாற்றுவதற்காக எனக்கும் ஜீவன் தொண்டமானுக்கு சந்தர்ப்பம் வழங்கியுள்ளார்கள்.
அதே நேரம் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் எமது மக்களுக்கு பல வாக்குறுதிகளை கொடுத்திருக்கிறார்.
ஆகவே அந்த வாக்குறுதிகளை நாங்கள் இந்த அமைச்சினுடாக நிறைவேற்றுவோம் அத்தோடு முழு இலங்கையிலும் வாழும் மலையக மக்களுக்கு இந்த அமைச்சினூடாக சேகைளையும் முன்னெடுப்போம். என அவர் மேலும் தெரிவித்தார்.

