தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து ஆராய குழு

426 0

3820குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாமல் நீண்டகாலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதியினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல இன்று இதனை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் வினாவொன்றுக்கு பதில் வழங்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று அரச சேவைகள், உள்நாட்டு அலுவல்கள் மற்றும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சுகள் தொடர்பான குழுநிலை விவாதம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.