சிரியாவில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென அந்நாட்டின் சிறுமி ஒருவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடக்கும் உள்நாட்டு போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர். பலர் பக்கத்து நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். சிலர் மட்டும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இவர்கள் ஒவ்வொரு நாளும் மரண பயத்தில் வாழ்கின்றனர். இதை இங்குள்ள 7 வயது சிறுமியான பானா அலாபத், உலகிற்கு சமூகவலைதளமான ‘டுவிட்டர்’ மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
ஹாரி பாட்டர் புத்தகம் : இவரது தாயார்தான் ‘டுவிட்டர்’ கணக்கை பராமரித்து வருகிறார். சமீபத்தில், ‘எனது மகளுக்கு ‘ஹாரி பாட்டர்’ திரைப்படம் பிடிக்கும். ஆனால், பார்க்க வாய்ப்பு இல்லை,’ என பதிவிட்டிருந்தார். உடனடியாக, இதன் ஆசிரியர் ஜே.கே. ரவ்லிங் ‘இ-புத்தகத்தை’ அனுப்பி வைத்தார்.
வேண்டாம் போர் : போரின் போது குண்டு மழைக்கு பயந்து படுக்கைக்கு கீழே ஒளிந்து கொள்ளும் ‘வீடியோவை’ சமீபத்தில் ‘டுவிட்டரில்’ வெளியிட்டார் பானா. ‘இன்னும் நாங்கள் உயிருடன்தான் உள்ளோம். தயவு செய்து குண்டு வீசுவதை நிறுத்துங்கள். எங்கள் பகுதியை காப்பாற்றுங்கள்,’ என்ற வாசகங்கள் அடங்கிய தனது படத்தை வெளியிட்டு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த சிறுமியின் கெஞ்சல் பலரின் மனதை உருக்குவதாக அமைந்துள்ளது.
ஆசிரியர் தலையங்கம்
-
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026 -
குமார் குரல் எப்போதும் குன்றாது!
January 4, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி
January 27, 2026 -
பெப்ரவரி 4 சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்- சுவிஸ்
January 16, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026 -
மாவீரர் பணிமனை யேர்மனிக்கிளை நாடாத்தும்-கேணல் கிட்டு ஓவியப் போட்டி 2026
December 24, 2025

