வறுமையை ஒழிக்க விசேட குழு – ஜனாதிபதி நியமனம்

279 0

625-472-560-320-505-600-053-800-900-160-100வறுமையை ஒழிப்பதற்காக விசேட செயல்குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த குழு அமைச்சர் சரத் அமுனுகமவின் தலைமையின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, கபீர் ஹசீம் உட்பட்ட 8 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

அடுத்த ஆண்டை அரசாங்கம் வறுமை ஒழிப்பு ஆண்டாக பிரகடனம் செய்துள்ளது.

இதற்கான ஆரம்பகட்ட செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி தலைமையில், நாடாளுமன்ற கட்டட தொகுதி ஒன்றில் விசேட கலந்துரையாடல் கூட்டம் ஒன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் பிரதமர், அமைச்சர்கள், மாகாண முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

அடுத்த ஆண்டின் முதல் வாரத்தில் வறுமை ஒழிப்பு செயல் திட்டங்கள் அனைத்து அமைச்சுக்களின் ஊடாக மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.