வாக்காளர் அட்டையுடன் முகக் கவசமும் முக்கியம்

241 0

மொத்தமாக நான்கு இலட்சத்து 9 ஆயிரத்து 808 பேர் வாக்களிக்க இருக்கிறார்கள். ஆகவே சகல தரப்பினரும் நேர காலத்தோடும் வாக்காளர் அட்டையோடும் அடையாள அட்டையோடும் முகக்கவசம் அணிந்து தங்களுடைய வாக்களிப்பு நிலையத்துக்கு சென்று தங்களது வாக்கை செலுத்த வேண்டும்” என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்துள்ளார்.

இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதன்கிழமை (05) நடக்க இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலுக்காக எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல ஏற்பாடுகளும் பூரணமாக்கப்பட்டிருக்கிறது. செவ்வாய்கிழமை காலை 2 வாக்கெண்ணும் நிலையங்களில் இருந்தும், இந்துக்கல்லூரி, மகாஜனா கல்லூரி, இரண்டு நிலையங்களில் இருந்தும் சிரேஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்களினால் வாக்களிக்கும் பெட்டிகள் யாவும் அந்தந்த வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 428 வாக்களிப்பு நிலையங்கள் ஆயத்தமாக இருக்கின்றன. மட்டக்களப்பு தொகுதியில் 194 வாக்களிப்பு நிலையங்களும், கல்குடாத் தொகுதியில் 119 வாக்களிப்பு நிலையமும், பட்டிருப்பு தொகுதியில் 115 வாக்களிப்பு நிலையமாக, மொத்தமாக 428 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.

இதற்கென தற்போது covid-19 பிரச்சனை காரணமாக சகல சுகாதார நடைமுறையை பின்பற்றி மக்கள் வாக்களிப்பதற்காக சகல ஏற்பாடுகளும் நமது மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளரிற்கு கீழான உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். சகல வாக்களிப்பு நிலையங்களிலும் இந்த சுகாதார நடைமுறை பின்பற்றப்படும். ஆகவே மக்கள் எவ்வித பயமுமின்றி covid-19 பிரச்சனைக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளும் சகல வாக்காளர் நிலையங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் அதில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களுக்கும் 2 போலீசார் வீதம் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆகவே எமது மாவட்ட மக்கள் எந்தவித பாதுகாப்பு அச்சமின்றி அதேநேரம் covid-19 தொற்று சம்பந்தமாகவும் எந்தவித அச்சமும் இன்றி வாக்களிக்கலாம். நாளை காலை ஏழு மணியிலிருந்து 5 மணி வரை நடைபெற இருக்கின்ற வாக்களிப்பு நடைமுறையில் தாங்கள் அனைவரும் அதாவது முற்றுமுழுதாக அனைவருமே அதில் கலந்து கொள்ள வேண்டும். மொத்தமாக 4 இலட்சத்து 9 ஆயிரத்து 808 பேர் வாக்களிக்க இருக்கிறார்கள்.

ஆகவே சகல தரப்பினரும் நேர காலத்தோடும், வாக்காளர் அட்டையோடும், அடையாள அட்டையோடும், முகக்கவசம் அணிந்து, தங்களுடைய வாக்களிப்பு நிலையத்துக்கு சென்று, தங்களது வாக்கை செலுத்த வேண்டும். என அவர் தெரிவித்தார்.