யாழ். மாவட்ட இராணுத் தளபதி இடமாற்றம்; கிழக்குத் தளபதி யாழ்ப்பாணம் வருகின்றார்

293 0

யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தொண்டர் படையணியின் தளபதியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த இடமாற்றம் உடனடியாக நடைமுறைக்கு வரும் என தெரிவீக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் யாழ்ப்பாணம் மாவட்ட புதிய தளபதியாக தற்போதைய கிழக்கு மாகாணத் தளபதி மேஜர் ஜெனரல் சேனரத் பண்டார நியமிக்கப்படவுள்ளார்.

பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த திடீர் இடமாற்றம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.