வவுனியாவில் பெரிய மரங்களை சாய்த்த பலத்த காற்று: ஒருவர் காயம்

267 0

வவுனியாவில் இன்று மதியம் வீசிய பலத்த காற்றினால் மூன்றுமரங்கள் வேரோடு சாயந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

அந்தவகையில் வவுனியா வலயக்கல்வி அலுவலகத்தில் நின்றிருந்த வேப்பமரம் ஒன்று அடியோடு சாய்ந்து வீழ்ந்துள்ளதுடன், வவுனியா கொறவப்பொத்தான பிரதான வீதியில் நாலாம்கட்டை பகுதியில் நின்றிருந்த மரம் ஒன்று வேரோடு சாய்ந்து வீதியின் குறுக்காக வீழ்ந்துள்ளது. இதன்போது குறித்த வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த ஒருவர் தெய்வாதீனமாக உயிர்பிழைத்துள்ளதுடன் அவரது மோட்டார் சைக்கிள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

இதேவேளை கொறவப்பொத்தான வீதி றம்பைக்குளம் சந்திக்கு அண்மையில் முறிந்துவீழ்ந்த மற்றொரு மரத்தினால் அதன் கீழ் நின்றிருந்த ஒருவர் சிறுகாயங்களிற்கு உள்ளாகியுள்ளார்.

வவுனியாவில் கடந்த சில தினங்களாக மழையுடனான காலநிலை நிலவிவருகின்றது. இந்நிலையில் இன்று மதியம் திடீரென வீசிய பலத்த காற்றினால் குறித்த மரங்கள் முறிவடைந்துள்ளது.
இதேவேளை முறிந்து வீழ்ந்த மரங்களை அவ்விடத்தில் ஒன்றுகூடிய இளைஞர்கள் உடனடியாக அகற்றியிருந்தனர்.

குறித்த சம்பவத்தினால் வவுனியா கொறவப்பொத்தான வீதியூடான போக்குவரத்து சிலமணி நேரங்கள் தாமதமடைந்திருந்தமை குறிப்பிடதக்கது.