மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி: ஏறாவூரில் சம்பவம்

225 0

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை 17.07.2020 இரவு இடம்பெற்றுள்ள வாகன விபத்து சம்பவத்தில் ஏறாவூர், மடுவத்தடி பகுதியில் வசிக்கும் முஹம்மது இமான் (வயது 17) எனும் இளைஞரே இவ்வாறு ஸ்தலத்திலேயே மரணமாகியுள்ளார்.

குறித்த இளைஞரோடு, அதே மோட்டார் சைக்கிளில் பயணித்த மீராகேணி கிராமத்தைச் சேர்ந்த நிஹாக்கான் முகம்மது அன் நஸீம் (வயது 18) என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில், ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிக வேகத்துடன் பயணித்ததாலேயே குறித்த விபத்து நேர்ந்திருக்கலாமென பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

விபத்துச் சம்பவம் பற்றி ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.