தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் கால எல்லை நீடிப்பு

302 0

கொவிட் 19 தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் செலுத்துவது தொடர்பில் உடன்பட்ட கால எல்லை நீடிக்கப்பட்டமை குறித்து அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்தை அறிக்கையிடுவதில் சில சமூக ஊடகங்கள் பல்வேறு தவறான கருத்துக்கள் மற்றும் தவறான அர்த்தப்படுத்தலுடன் பிரச்சாரம் செய்யப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்திற்கு அமைவாக 2020 ஜுலை மாதம் 15 ஆம் திகதி திறன் அபிவிருத்தி தொழில் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் தொடர்பு அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை ஆவணம் தொடர்பில் அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானம் கீழ்வருமாறு அமைகிறது என்பது வலியுறுத்தப்படுகிறது.

´முதலாளிமார், ஊழியர் தொழிற் சங்கம் மற்றும் திறனாற்றல் அபிவிருத்தி, தொழில்வாய்ப்பு மற்றும் தொழிலாளர் தொடர்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட உடன்பாட்டிற்கு அமைய கொவிட் 19 தொற்றின் காரணமாக 2020 ஆம் ஆண்டு மே மாதம் மற்றும் ஜுன் முதலான 2 மாதங்களுக்கு வேலையில்லாமையினால் ஊழியர்கள் வீடுகளில் தங்கியிருக்க வேண்டிய நிலை இருந்த நிறுவனங்களின் ஊழியர்களுக்கு அவர்கள் இறுதியாக பெற்ற முழுமையான சம்பளம் செலுத்தப்பட்ட மாதத்திற்கு அமைவாக அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதம் அல்லது ரூபா 14,500 என்ற இரண்டிலும் பார்க்க நன்மை பயக்கும் தொகையை செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இதற்கமைவாக செயல்பட்டு 2020 ஜுலை மாதம் தொடக்கம் செப்டெம்பர் வரையிலான காலப்பகுதிக்காக ஊழியர்களின் சம்பளத்தை செலுத்துவதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கிடையில் எட்டப்பட்ட உடனபாட்டு தொடர்பான தகவல்கள் திறனாற்றல் அபிவிருத்தி தொழில் வாய்ப்பு மற்றும் தொழிலாளர் தொடர்புகள் அமைச்சரினால் அமைச்சரவையின் கவனத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டது.´ என அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவௌவினால் வௌியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.